மழைக்கால மேகமே மலர் கொண்டு வா வா எனை ஆழும் ஓர் தேவி குழல் சூட வா வா கதிர் வர இதழ் பூக்கும் கமலம் அவள் சுடர் விழி ஒழி வீசும் புதுமையவள் அவள் கனி மொழி இனி மணி ஒலியே நிலம் பார்த்து நாணி நிற்கும் அவளது பார்வை ஸ்வரம் ஏழில் நாதம் மீட்டும் அழகிய வீணை அவளே அழகெனும் உலகினில் ராணி அடடா படைத்தவன் கலியுக ஞானி மார்கழிக்காற்றில் ஆடும் பனிமலர்ச்சோலை மாதிவள் தேவலோகம் அனுப்பிய ஓலை முகவரி எனதுயிரே கலைக்கோவில் தேவ சிற்பம் நடமிடப்பார்த்தேன் கவிபாட வார்த்தை கொஞ்சம் அவளிடம் கேட்டேன் அழகாய் பொழிந்திடும் மதிமுக ரூபம் அழகாய் இதழ்வழி தமிழ் நதி ஊரும் பாவையின் பார்வையாலே பசுமைகள் தோன்றும் மாந்தளிர் மேனி சிந்தும் இளமையின் கோலம் இவளொரு அதிசயமே